Thursday, November 12, 2009

தகவல் தொழில்நுட்ப துறையில் (நமது) பணிபுரிவோரின் அன்றாட (தமிழ்) உரையாடல்கள்

-------------------------------------------------------------

மருத்துவமனையில்,
"என்னைக்கு டாக்டர் அவர ரிலீஸ் பண்றீங்க ?"

(டிஸ்சார்ஜத்தான் அப்படி கேட்குறாரு)
-------------------------------------------------------------

புதுசா கல்யாணம் ஆனவன்,
அலைபேசியில் நண்பனிடம்,

”ஏண்டா கல்யாணத்துக்கு வரலை?”
”அன்னைக்கு டெலிவரி இருந்திச்சுடா...”
”உன் பொண்டாட்டிக்கா ? !!!!

-------------------------------------------------------------

ஆசிரமத்தில்,
”சாமி, வாழ்க்கையில எனக்கு ஒரே Issues...

இதுக்கெல்லாம் என்ன Solution?”

(அவருக்கு வாழ்க்கையில பிரச்சினையாம்...

அதுக்கு என்ன தீர்வுங்குறத இப்படி கேட்குறாரு)
-------------------------------------------------------------

”அவுங்க ஹனிமூனுக்கு ஆன் சைட் போறாங்க...”
(வெளிநாடு போறதுன்னாவே, ஆன்சைட் தான்)

-------------------------------------------------------------

குழந்தை அப்பாவிடம்,
"அப்பா, Thread ன்னா என்னப்பா ?”

இப்ப ஒரு சமயத்துல, ஒரு வேலையை...”
அம்மா உள்ளேயிருந்து, “Thread ன்னா நூல்மா.

-------------------------------------------------------------

டிவி ஷோரூமில் சேல்ஸ்மேனிடம்,
என்னோட requirement என்னன்னா,....

(டிவின்னு இல்ல, சிலரு
டீக்கடையில
போயும் requirement சொல்றாங்க !!!!)

-------------------------------------------------------------

மனைவி கணவனிடம்,
ஏங்க, வாசிங்மெஷின் பாதில நின்னுருச்சுங்க...
Restart பண்ணுடீ !!!

பின்குறிப்பு:

திருமணத்திற்கு பின் கண்டிப்பாக
தென்றல் வாழ்க்கையில்
நடைபெறகூடிய ஒன்று
!!!!

-------------------------------------------------------------

No comments:

Post a Comment