Thursday, November 12, 2009
படித்ததில் பிடித்தது !!!
நாகரீகக் கோமாளிகள்
இரண்டு ரூபாய் தேனீருக்கு
இருபது ரூபாய் தருவார்கள்...
சூடாகவே பருகிய காபியை
ஐம்பது ரூபாய் கொடுத்து சில்லென்று குடிப்பார்கள்...
சுடச்சுட உணவு சாப்பிட
குளு குளு அறையைத் தேடுவார்கள் !!!
பிக்கவே முடியாத பீட்சாவை
பிடிக்கும் என்பார்கள் !!!
பேருந்து நிறுத்தம் செல்ல
ஆட்டோவைத் தேடுவார்கள்...
நூறு ரூபாய் ஊருக்கு
நானூறு ரூபாய் கொடுத்து செல்வார்கள்...
ஆயிரம் ரூபாய் வாடகை வீட்டை
ஐந்து பேர் சேர்ந்து ஐந்தாயிரம் தருவார்கள்...
பார்த்தால் 'ஹாய்' என்றும்,
கேட்டால் 'யா' என்றும்
அமெரிக்கக் கனவில் ஆழ்ந்திருப்பார்கள்...
எண்ணெய் தடவாது வரும் செம்பட்டைக்கு
மாதமொரு முறை செலவழிப்பார்கள்...
அதிலும் பெண்கள்,
காதணியும், காலணியும், கைப்பையும்,
கைக்கடிகாரமும், தலைப்பட்டையும்
கைக்குட்டையும் உடையின்
நிறத்திலேயே பெற்றிருப்பார்கள்...
இவர்கள் இதயமும் வேலையைப் போன்றே மென்பொருளாய் ஆனது போலும் ???
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment