புது வருட உறுதிமொழியாய்
என்ன எடுக்க இருக்கிறாய்
என்றேன் நண்பர்களிடம்,
சிகரெட்டால சீரழிஞ்சேன்
இனிமே தொடப்போறதில்லை
என்றான் ஒருவன்
வீணாப்போன விஸ்கியை விட்டுட்டேன்
இன்றிலிருந்து என்றான் இன்னொருவன்
இருக்கிறவளைக் கழட்டிவுட்டு
இன்னொருத்தியைக் காதலிக்கணும்னான்
வேறொருத்தன்
கடைசியாக,
என் ஆருயிர் நண்பன் சக்தியிடம்
என்ன செய்ய இருக்கிறாய் என்றேன் ???
அதற்கு அவன்,
.....
.......
..........
“முப்பதியட்டுக்கு மேல் இடுப்புச் சுற்றளவை
ஒரு இஞ்ச் கூட ஏத்தமாட்டேன்” என்றான் !!!!!!
Thursday, November 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment